சார்ஜாவில் இருந்து விமானத்தில் பண்டல், பண்டலாக திருச்சிக்கு கொண்டு வரப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்…!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.அதேபோல வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்கள் வந்து செல்கின்றன. அந்தவகையில் சார்ஜாவில் இருந்து விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த பையில் பண்டல்,பண்டலாக சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தன. மொத்தம் 26 ஆயிரம் சிகரெட்டு பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகள் சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததோடு அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.