அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட அ.ம.மு.க சார்பில் தொண்டர்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும் திருச்சிராப்பள்ளி 47 வது வார்டு கவுன்சிலருமான பி செந்தில்நாதன் ஏற்பாட்டில் கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை, கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான எம். ராஜசேகரன் தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் ஐந்து அணிகளாக பங்கேற்றனர். தகுதி சுற்று முறையில் நடந்த இந்த போட்டியின் இறுதியில் பெஸ்ட் பாபு தலைமையிலான , டிடிவி ராக்கிங் பாய்ஸ் அணியும் ஜான் கென்னடி தலைமையிலான டிடிவி கிங்ஸ் அணியும் மோதின. இறுதியில், டிடிவி ரோலிங் டிராபியை அம்மா பேரவை செயலாளர் பெஸ்ட் பாபு தலைமையிலான டிடிவி ராக்கிங் பாய்ஸ் வெற்றி பெற்று கைப்பற்றியது. இப்போட்டியில் மாவட்ட, பகுதி, வட்ட, ஒன்றிய, கழக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.