அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை (திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு திருச்சி வருகை தருகிறார். அவருக்கு புதுக்கோட்டை ரோடு சுப்பிரமணியபுரம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர் அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரை சந்திக்க உள்ளார். எடப்பாடி பழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை கழக நிர்வாகிகள் நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள்,
செயல் வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் கலந்து கலந்து கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
1
of 927
Comments are closed.