Rock Fort Times
Online News

அமைச்சர் கே.என்.நேருவுடன் முரண்பாடு அதிகரிக்கிறது – எம்.எல்.ஏ செளந்தரபாண்டியனின் தனிப்பாதை பார்முலா ஒர்க் அவுட் ஆகுமா ?…

திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள  9 சட்டமன்ற தொகுதிகளில் லால்குடியும் ஒன்று.  இத்தொகுதியில் உடையார், முத்தரையர்,  தலித் மற்றும் முக்குலத்தோர் சமூக மக்களே மெஜாரிட்டியாக வசிக்கின்றனர்.  எனவே, இந்து உடையார் சமூகத்தை சார்ந்த சௌந்தரபாண்டியனுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வாய்ப்பு கட்சி தலைமையால் கொடுக்கப்பட்டது. கடந்த 2006, 2011, 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று, தொடர்ந்து நான்காவது முறையாக லால்குடி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் சௌந்தரபாண்டியன்.  இத்தொகுதியில்தான் தற்போதைய அமைச்சர் கே.என்.நேரு 1989, 1996 ஆகிய தேர்தல்களில் வெற்றியும், 1991, 2001 ஆகிய ஆண்டுகளில் தோல்வியும் கண்டிருந்தார்.  இந்நிலையில், சமீப காலமாக அமைச்சர் கே.என்.நேருவுக்கும், எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியனுக்கும் இடையே வெளியில் சொல்லப்படாத பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கடிதம் கொடுத்து பகீர் கிளப்பினார் சௌந்தரபாண்டியன். இதன்பிறகு, லால்குடி தொகுதிக்கு அரசுமுறை ஆய்வுப் பணிக்கு வந்த அமைச்சர் கே.என்.நேரு, தன்னை அழைக்கவில்லை என்பதால், நான் இறந்துவிட்டதால் என்னை, என் தொகுதி ஆய்வுக்கு வரசொல்லவில்லை என்று, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். சமீபத்தில் கூட, முதலமைச்சரை சந்தித்த சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட ஏனைய எம்.எல்.ஏக்கள் பலரும், கே.என்.நேருவுக்கு எதிராக மனுகொடுத்தனர் என்கிற தகவலும் உலா வருகிறது. இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக திருச்சி வந்துள்ளார். இவரை வரவேற்று, இன்றைய நாளிதழில் விளம்பரம் கொடுத்துள்ளார் எம்.எல்.ஏ.சௌந்தர பாண்டியன்.  ஆனால், அதில் அமைச்சர் கே.என்.நேரு படமோ, அவரின் தொகுதி சார்ந்த மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி உள்ளிட்ட நிர்வாகிகளின் படங்களோ இடம் பெறவில்லை.  இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன் என்பது தெரியவில்லை.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்