திருச்சியில் 5 தளங்களுடன் கட்டப்பட்ட காவல் நிலையம்- காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
திருச்சி சிந்தாமணி பகுதியில் 3 கோடியே 5 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் 5 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கோட்டை காவல் நிலைய கட்டிடம்,
திருச்சி பீமநகர் பகுதியில் 2 கோடியே 58 லட்சத்து 89 ஆயிரம் செலவில் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள மாநகர காவல் துணை ஆணையர் அலுவலக கட்டிடம்,
திருச்சி உறையூர் பகுதியில் 3 கோடியே ஒரு லட்சத்து 51 ஆயிரம் செலவில் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள 24 காவலர் குடியிருப்பு ஆகிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி குத்துவிளக்கு ஏற்றினார். அப்போது, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக அதிகாரிகளும், காவல்துறையினரும் உடன் இருந்தனர்.
புதிய காவல் நிலையம் திறக்கப்பட்டதை ஒட்டி திருச்சி மலைக்கோட்டை அருகே போக்குவரத்து நெரிசலான பகுதியில் ராணி மங்கம்மாள் காலத்து கட்டிடத்தில் செயல்பட்டு வந்த கோட்டை காவல் நிலையம் எஸ்.ஆர்.சி கல்லூரி செல்லும் நுழைவு சாலையில், சிந்தாமணி பகுதியில் இன்று திறக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.
Comments are closed.