திருச்சி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவில் சனிக்கிழமை பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, வரும் சனிக்கிழமை 11 வட்டங்களில் குறைதீர் முகாம்கள் நடைபெறும். திருச்சி கிழக்கு வட்டத்தில், தென்றல் நகர், திருச்சி மேற்கு வட்டத்தில் புத்தூர்-2, திருவெறும்பூர் வட்டத்தில் பாலாஜி நகர், ஸ்ரீரங்கம் வட்டத்தில் மல்லியம்பத்து, மணப்பாறை வட்டத்தில் ஆனாம்பட்டி, முசிறி வட்டத்தில் காளியாபாளையம், துறையூர் வட்டத்தில் காளிப்பட்டி, தொட்டியம் வட்டத்தில் திருநாராயணபுரம், மருங்காபுரி வட்டத்தில் கருமலை கிராமம், லால்குடி வட்டத்தில் செம்பரை, மண்ணச்சநல்லூர் வட்டத்தில் டோல்கேட்-2 ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறும். காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம். அந்தந்த வட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என மாவட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Comments are closed.