Rock Fort Times
Online News

விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம்…

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ் தலைமையில் நடந்தது..

வருகிற 18ம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மாநகரில் விநாயகர் சிலைகள் , அமைத்தல் , ஊர்வலம், சிலை விஜர்சன நிகழ்வுகளின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், துணை மற்றும் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இதில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்தின் போது முக்கிய சந்திப்புகள் மற்றும் பிரச்சனைக்குரிய இடங்கள் கண்டறியப்பட்டு எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, விநாயகர் ஊர்வலம் நடைபெறும் 20 ஆம் தேதி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறுமின்றி போக்குவரத்து மாற்றம் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும், விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்