Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் சமையல் தொழிலாளி கொலையில் 4 பேர் கைது….

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் கீழத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் ரமேஷ் (வயது 40). சமையல் வேலை செய்து வந்த இவர், அவ்வப்போது காவிரி ஆற்றில் மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வந்தார். ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் தங்கி இருப்பார். இவர், கடந்த 4-ந் தேதி அம்மாமண்டபத்தில் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ரமேஷை ஒருவர் இரும்பு ராடால் தாக்குவதும், 3 பேர் அருகில் நிற்பதும் பதிவாகி இருந்தது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் ரமேஷ்க்கு இரண்டு மனைவிகள் இருப்பதும், முதல் மனைவி மற்றும் மகள் ஈரோட்டில் இருப்பதும், மற்றொரு மனைவி மற்றும் மகன் ஸ்ரீரங்கத்தில் உள்ளதும் தெரிய வந்தது. இருவரும் அவருடன் வசிக்கவில்லை. பின்னர், இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்டவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கொலையாளிகள் சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் சென்னை சென்று நான்கு பேரை பிடித்தனர். இன்று ( 07.09.2023 ) காலை அவர்களை திருச்சிக்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெண் விவகாரத்திலும், மது போதையிலும் இந்த கொலை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. பின்னர் அவர்களை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்