Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி 55-வது வார்டு பகுதியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி…* இன்று முதல் குடிநீர் வினியோகம்…!

திருச்சி மாநகராட்சி, மண்டலம் 5, வார்டு எண் 55-க்கு உட்பட்ட நட்சத்திர நகர் பகுதியில் 24×7 திட்டத்தின்கீழ் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு வசந்தா நகர் 1வது தெரு முதல் 9வது தெரு வரை இன்று (21.07.2026) குடிநீர் விநியோகம் சோதனை முறையில் வழங்கப்பட்டு வருகிறது. 55வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் குறித்து மேயரிடம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று முதல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என மேயர் மு.அன்பழகன் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்