புகையிலை உபயோகித்தால் சக்தி கிடைக்கும் என்பது போல “ரீல்ஸ்” வெளியிட்ட கல்லூரி மாணவர்-எச்சரித்த காவல்துறை…! (வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்டம், ஜெம்புநாதபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், சமூக வலைதளமான “ரீல்ஸ்” பகுதியில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், கிரிக்கெட் விளையாடுவது போலவும், பேட்டிங் செய்யும்போது சரியாக விளையாட முடியாதது போலவும், அதன்பிறகு பாக்கெட்டில் உள்ள புகையிலையை எடுத்து வாயில் வைத்ததும் ஏதோ சக்தி கிடைத்தது போலவும், அதன் பிறகு சிக்ஸர், பவுண்டரி அடிப்பது போலவும் அந்த வீடியோ முடிகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. புகையிலைப் பொருட்கள் தயாரிப்பதற்கும், அதனை விற்பதற்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. ஆகவே, இதுகுறித்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வீடியோ வெளியிட்ட கல்லூரி மாணவரை பிடித்தனர். அப்போது அவர், தான் தவறாக வீடியோ வெளியிட்டு விட்டேன் என மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அவரது எதிர்கால நலன் கருதி அவரை போலீசார் இனிமேல் இதுபோன்று செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினர் . பின்னர் அவர் தான் செய்தது தவறு, இதுபோன்ற வீடியோக்கள் யாரும் வெளியிட வேண்டாம், புகையிலை பொருட்களை யாரும் பயன்படுத்த வேண்டாம் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Comments are closed.