Rock Fort Times
Online News

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் உள்பட 8 பேர் பற்றி பரபரப்பு தகவல்கள்…!

புதுக்கோட்டை மச்சுவாடி நேரு நகரை சேர்ந்த கணேசன் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகை கடை நடத்தி வருகிறார். இவர், புதுக்கோட்டையில் பேராசிரியராக பணியாற்றியபோது திருச்சி கருமண்டபம் ஆசாத் நகர் ஆர்எம்எஸ் காலனியைச் சேர்ந்த வெங்கடேஷ் (39) பழக்கமானார்.  இந்த பழக்கத்தின் அடிப்படையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணேசனிடம் பள்ளி ஒன்று கட்டுவதாக கூறி  ரூ.35 லட்சத்து  65 ஆயிரத்தை வெங்கடேஷ் கடன் வாங்கி இருந்தார்.
இதில், ரூ.5 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டு மீதமுள்ள தொகையை தராமல் இருந்துள்ளார்.  இதுபற்றி கணேசன் ஓலையூரை சேர்ந்த தனது மச்சினன் முத்தையாவிடம் கூறியுள்ளார்.  இதைஅடுத்து கடந்த வாரம் கணேசன், முத்தையா உள்பட  3 பேர் சென்று வெங்கடேஷிடம், மீதி பணத்தை கேட்டுள்ளனர். ஆனால், அவர் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள்  நேற்று திருச்சி  பீமநகரை சேர்ந்த கரண் (22), கேகே நகரை சேர்ந்த சிபிராம் (19), ஓலையூரைச் சேர்ந்த தினேஷ் (33), கல்யாணசுந்தர புரத்தைச் சேர்ந்த அருண்குமார் (26), விக்னேஷ் (24)ஆகிய 5 பேரும் மூன்று கார்களில் வந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று கார்களில் சோதனை செய்தனர். அப்போது கரண் என்பவருக்கு சொந்தமான காரில் பெரிய வீச்சருவாள் இருந்தது. இவர், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் இளைஞர் பாசறை துணை செயலாளராக உள்ளார். இதை அடுத்து கரண் உள்பட ஐந்து பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது கடன் தொகையை வசூலிக்க ஆயுதத்துடன் வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து மூன்று கார்கள், வீச்சருவாள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
பின்னர், இது தொடர்பாக கே.கே.நகர் இந்திரா நகரை சேர்ந்த பார்த்திபன் (30), ஓலையூரை சேர்ந்த விஜயகுமார் (40), புதுக்கோட்டை மச்சுவாடியை சேர்ந்த முத்தையா (45) ஆகியோரையும் சேர்த்து 8 பேர் மீது கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்