மார்ச் மாதம் முழுவதும் முதல்வர் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் ! – திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நாளைய தினம் ( மார்ச் -01) பிறந்தநாள்.இதையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது., கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வரின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மரம் நடுதல், இரத்தம் தானம் செய்தல், கழக கொடி ஏற்றுதல் என பொது மக்களுக்கு பயன்படும் வகையில் மாதம் முழுவதும் முதல்வரின் பிறந்தநாளை எழுச்சியாக கொண்ட வேண்டும் . மேலும் பகுதி, ஒன்றிய, நகர,பேரூர் கழகங்களில் கழகக் கொடியேற்றியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பணியாற்றவேண்டும். மேலும், மாவட்ட கழகத்தால் அறிவிக்கப்பட்ட, தேர்தல் பார்வையாளர்கள் அனைத்து வட்ட, வார்டு, ஊராட்சிகளிலும் கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்கிட ஏதுவாக, மேற்க்கண்டபடி நிகழ்ச்சி ஏற்பாடுகளை அந்தந்த பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் ஒப்புதலுடன் வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் நிகழ்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திட வேண்டுமாய்அன்புடன் கேட்டுகொள்கின்றேன். என தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.