Rock Fort Times
Online News

திருமாவளவன், காதர்மொய்தீன், செல்வப் பெருந்தகை உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை அவர்களது இல்லங்களுக்கே நேரில் சென்று சந்தித்து, வாழ்த்துப் பெற்று வருகிறார். நேற்றைய தினம் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று (மே 12) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றதோடு தன்னை ஆதரித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டார். பின்னர், வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய், அவரிடம் வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடனிருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்