தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று (ஆகஸ்டு 1) தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். அவர்கள் அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவத்தைப் பயன்படுத்தி தகவல்கள் திரட்ட உள்ளனர். முதல்முறையாக இக்கணக்கெடுப்பில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக பிரத்யேக செல்போன் செயலி மூலம் தரவுகள் பதிவு செய்யப்படும். 1948-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டப்படி, சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். சுய கணக்கெடுப்பு செய்தவர்கள் அதற்கான அடையாள எண்ணை கணக்கெடுப்பாளர்களிடம் காட்ட வேண்டும். வீட்டுவசதி நிலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த தரவுகளைச் சேகரிக்கும் இந்த தேசியப் பணியில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.