Rock Fort Times
Online News

சென்னை வந்த ராகுல்காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்- அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவரது அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ‘இயக்க மறு சீரமைப்பு திட்டம்’ என்ற பெயரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமையில்  ஜூலை 23 ம் தேதி முதல் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பயிற்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த பயிற்சி கூட்டம் இன்று(01-08-2026) நிறைவு பெறுகிறது. நிறைவு நாள் பயிற்சி கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்பி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் ராகுல்காந்தி எம்பி இன்று காலை சென்னை வந்தடைந்தார். அவரை தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இன்று மாலை 4 மணியளவில் மாமல்லபுரத்தில் நடைபெறும் பயிற்சிக் கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல்காந்தி பிறகு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் தமிழகத்தின் அரசியல் சூழல்கள் குறித்து உரையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று இரவு அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்