அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 82 பேர் மீது வழக்கு…!
டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த காரில் புறப்பட்ட பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். இதேபோல மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை கண்டித்து, திருச்சி ஜங்ஷன் வழி விடு வேல்முருகன் கோவில் அருகே திருச்சி மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஒண்டி முத்து தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர் . இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில வர்த்தக பிரிவு செயலாளர் எம்.பி.முரளிதரன், சாய்ராம் என்கிற சேகர், அன்பு, லாவண்யா, புவனேஸ்வரி உள்ளிட்ட 82 பேர் மீது கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
Comments are closed.