புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கோவளம் அடுத்த செம்மஞ்சேரி அருகே கார் வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் கார் லாரியின் அடியில் சிக்கி முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது.இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீசாரும், தீயணைப்புத்துறையினரும்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி உயிரிழந்த 4 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்தவர்கள் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆதில் முகமது(19), அஸ்லூப் முகமது(22), சுல்தான்(23), முகமது ஆசிக்(25) என்பது மட்டும் தெரிய வந்தது. மற்ற விவரங்கள் தெரியவில்லை.இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.முகமது ஆசிக் என்பவர் நேற்றுதான் மலேசியாவில் இருந்து சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது.
1
of 840
Comments are closed.