தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் (திருப்பணி) இணை ஆணையர் பொன்.ஜெயராமனின் தாயார் பொன்.ஆவடைத்தங்கம் அவர்கள், செப்டம்பர் 3ம் தேதி செவ்வாய்கிழமையான ( இன்று ) மாலை காலமானார். அம்மையாரின் இறுதி சடங்கு மதுரை மாவட்டம், எழுமலையில் உள்ள இல்லத்தில் 4ம் தேதி புதன்கிழமை மாலை 3மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை எய்திய பொன்.ஆவடைத்தங்கம் அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முதல் மகன் பொன்.கருணாநிதி எழுமலை பகுதியில் மிக பிரபலமான பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை நடத்திவருகிறார். இரண்டாவது மகன்தான் ஜே.சி பொன்.ஜெயராமன், கடைசி மகன் பொன். திருமலை ராஜா, லதா ஜூவல்லரி என்கிற நிறுவனத்தை நடத்திவருகிறார்.
இணை ஆணையர் பொன்.ஜெயராமன் அவர்களை பொறுத்தவரை பழகுவதற்கு இனியவர். தீர்க்கவே இயலாத துறை ரீதியிலான பல்வேறு விவகாரங்களை எளிதில் சமாளிக்க்கூடியவர். சாமானியர்கள் முதல் சாம்ராஜ்ஜியங்களை ஆள்பவர்கள் வரை அனைவரிடத்திலும் நல்லதொரு நட்புணர்வு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.