திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை
பொருட்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி கந்தவேல் தலைமையிலான குழுவினர் ஸ்ரீரங்கம் நான்கு கால் மண்டபம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு கடையில் பண்டல், பண்டலாக ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை கொண்டு செல்வதற்கான இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கந்தவேல், ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா, வியாபாரி முருகானந்தத்தை கைது செய்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.