Rock Fort Times
Online News

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவன் சடலமாக மீட்பு…! (வீடியோ இணைப்பு)

திருச்சி திருவானைக்காவல் செக்போஸ்ட் கொள்ளிடம் நேப்பியர் பாலம் மணல் அரிப்பால் அதன் தூண்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மணல் அரிப்பை தடுக்கும் வகையில் அதன் அருகிலேயே சுமார் 10 அடி உயர தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது அந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.
அதில், சிலர் குளித்து மகிழ்கின்றனர். அந்தவகையில் திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்த லூடஸ் என்பவரது மகன் சாம் ரோஷன் என்ற பத்தாம் வகுப்பு பயின்ற மாணவன் நேற்று(22-06-2024) ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினான்.

இதுகுறித்த தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேற்று மதியம் முதல் இரவு வரை தேடியும் சிறுவனை மீட்க முடியவில்லை. இன்று காலை பெரம்பலூர், திருச்சி, ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த ஸ்கூபா டைவிங் வீரர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் மாயமான சிறுவனை தீவிரமாக தேடினர். அப்போது ஓரிடத்தில் சிக்கி கிடந்த சிறுவனை சடலமாக மீட்டனர். எப்படியும் தங்களது மகன் உயிரோடு கிடைத்து விடுவான் என்று காத்திருந்த பெற்றோர், மகன் சடலமாக மீட்கப்பட்டதை கண்டதும் கதறி அழுதனர். பின்னர் சிறுவனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தவெக செயற்குழு கூட்டத்திற்கு மாஸ் என்ட்ரி தந்த விஜய்...! யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..!

1 of 899

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்