தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார் என சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் . இந்த வழக்கை விசாரித்த சேலம் 4-வது நீதித்துறை நடுவர் யுவராஜ், அண்ணாமலை மீது இரண்டு சமுதாயத்திற்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்ட பிரிவின்கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அரசின் அனுமதி பெற வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார். அனுமதி நகல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது அண்ணாமலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.