திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனின் தரிசித்துச் செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் கருவறை மற்றும் முக்கிய இடங்களை தங்களது செல்போன் மற்றும் கேமரா மூலம் வீடியோ, புகைப்படம் எடுக்கின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு கோவிலில் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
அந்த தடை உத்தரவு இன்று (1-10-2023) முதல் அமலுக்கு வந்தது. மலை அடிவாரத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கைபேசி பாதுகாப்பு அறைகளில் பக்தர்கள் தங்களது செல்போன்களை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல, முக்கிய கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.