தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளி யில் ஈடுபட்டதால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை கண்டித்தும் தங்களை சட்டப்பேரவையில் பேச அனுமதிக்க கோரியும், கள்ளச்சாராய சம்பவத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க கோரியும் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று(27-06-2024) ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Comments are closed.