திருச்சி திருவானைக்காவல் அருகே உள்ள உத்தமர்சீலி ஊராட்சியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர் வீட்டருகே உள்ள மின் கம்பத்திலிருந்து முறைகேடாக இணைப்பை ஏற்படுத்தி மின்சாரம் பயன்படுத்தி வருவதாக புகார் வந்தது. அதன்பேரில் மின்வாரிய அலுவலர்கள் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவர் முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்தியது உறுதியானது. இதனையடுத்து அவர் பயன்படுத்திய மின்சாரத்துக்கு கட்டணமும், மேலும் அபராதமும் சேர்த்து ரூ. 90 ஆயிரம் விதிக்கப்பட்டது.
Comments are closed.