Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு தொகுதியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு…

மதுரையில் இருப்பதுபோன்ற சர்வதேச தரத்தில் திருச்சியிலும் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து திருச்சி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட அன்றைய தினத்திலிருந்து திருச்சி மக்கள் மட்டுமின்றி போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பலரும் திருச்சியில் எந்த இடத்தில் கலைஞர் நூலகம் அமையப்போகிறது என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். பலரோ அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த தொகுதியான திருவெறும்பூர் பகுதிக்கு தான் கலைஞர் நூலகம் வரும் என பரவலாக பேசி வந்தனர். ஏனென்றால்,என்.ஐ.டி தொடங்கி, பல கல்வி நிறுவனங்கள் அந்த பகுதியில் இருப்பதாலும் பஞ்சப்பூர் பேருந்து நிலையம், துவாக்குடி, திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைக்கும் இடம் என்பதாலும், திருவெறும்பூரிலேயே கலைஞர் நூலகம் அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என பரவலாக பேசப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் திருச்சி மன்னார்புரத்தில், திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியையும், அதேபோல் டிவிஎஸ் டோல்கேட்டை ஒட்டியுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு அருகில் உள்ள இடத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.இதில் டிவிஎஸ் டோல்கேட் மின்வாரிய அலுவலகத்திற்கு அருகில் உள்ள இடத்திலேயே கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பொது நூலக இயக்குனர் இளம் பகவத், மண்டல தலைவர் மு.மதிவாணன், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நூலகத்துறை அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

🔴: ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் 6-ம் திருநாள்

1 of 850

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்