இன்ஸ்டாகிராமில் வந்த லிங்கை ‘கிளிக்’ செய்ததால் ரூ.18 லட்சத்தை இழந்த ஐடி ஊழியர்…!
சைபர் கிரைம் போலீசார் விசாரணை
திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்( வயது 46) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர், சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த ஒரு விளம்பரத்தை கிளிக் செய்துள்ளார்.
அதில், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. இதனை நம்பிய ராமச்சந்திரன், அவர்கள் கூறிய 8 வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக கடந்த 3 மாதத்தில் ரூ.18 லட்சத்து 45 ஆயிரம் வரை அனுப்பி வைத்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமிகள் அவருக்கு லாபத் தொகையும் தரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்பத் தராமல் ஏமாற்றி விட்டனர். அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. தான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமச்சந்திரன் இதுகுறித்து ஆன்லைன் மூலமாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கன்னிகா வழக்கு பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.