கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள அரியான்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்- அம்சவள்ளி தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள். கணவன்- மனைவி இருவரும் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளிகள். இவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கரும்பு வெட்டுவதற்காக தங்களுடைய இரு குழந்தைகளுடன் வந்திருந்தனர். குழந்தைகள் அருகில் விளையாடிக் கொண்டிருக்க தம்பதியர் இருவரும் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திருக்கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதை கவனிக்காமல் திடீரென்று லாரியை பின்னோக்கி இயக்கியுள்ளார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த கவின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த கவினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.