Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் சுவாமி திருக்கோவில் நிா்வாகம் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில் :
சட்டசபையில் அறநியைலத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தபடி, தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகையுள்ள முக்கிய கோயில்களான திருவண்ணாமலை, சமயபுரம், பழனி, ஸ்ரீரங்கம் ஆகியவற்றில் ரூ.300/- கட்டணத்தில் தினமும் மாலை 3 முதல் 4 மணிவரை 500 பக்தர்களை மட்டும் சிறப்பு தரிசன வழியில் அனுப்பும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இதை நடைமுறைப்படுத்துவது பற்றி பக்தர்கள் தங்கள் கருத்துக்களை iceotry25700.hrcastn.gov.in என்ற மெயில் மூலமோ, அல்லது இணை ஆணையர்/ செயல் அலுவலர் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் என்ற முகவரிக்கோ 15.06.2023க்குள் தெரிவிக்கலாம். என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

 

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்