Rock Fort Times
Online News

தவறுதலாக வங்கி கணக்கில் வந்த ரூ. 2 லட்சம் – செலவு செய்த வியாபாரி தற்கொலை…

திருச்சி மண்ணச்சநல்லூர் நெய்வேலி தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 54). காய்கறி வியாபாரியான இவர், முசிறியில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் அவரது வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் வரவு வைக்கப்பட்டிருந்தது. இந்த தொகையை திரும்ப வங்கி நிர்வாகம் கேட்கும் என நினைத்து சிறிது காலம் காத்திருந்தார். ஆனால் யாரும் பணத்தை திருப்பி கேட்கவில்லை. அதனை தொடர்ந்து அவர் அந்த பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார். சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து அவரது வீட்டிற்கு வந்த மேனேஜர், மாற்றி வரவு வைக்கப்பட்டுவிட்டதாகவும், பணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வியாபாரி முருகேசன், 2 லட்சத்திற்கு நான் எங்கே போவேன் என்று கலங்கி போய் உள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர் , மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முருகேசனின் மனைவி, கலா வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்