கரூரில் இருந்து திருச்சி நோக்கி இன்று ( 20.05.2023 ) காலை தனியார் பேருந்து பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் திருச்சி கம்பரசம் பேட்டை பள்ளிவாசல் அருகே வந்தபோது , எதிரே திருச்சியில் இருந்து கரூர் சென்ற கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்நிலையில் அதே திசையில் வந்து கொண்டிருந்த இன்னொரு கார் பஸ்சின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் பஸ் மற்றும் 2 கார்கள் பலத்த சேதம் அடைந்தன. ஒரு காரில் பயணம் செய்த 5 பேரும், மற்றொரு காரில் பயணம் செய்த 3 பேரும், தனியார் பஸ்சில் பயணம் செய்த 2 பயணிகள் என மொத்தம் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.