திருச்சியில் செயல்படும் மனமகிழ்மன்றத்தை முற்றுகையிட்டு அமமுக போராட்டம் : மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் கைது…!
மனமகிழ் மன்றம் என்ற பெயரில் 12 மணி நேரம் மதுபானங்களை விற்று தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் அந்த மன்றங்களை கண்டித்தும், உறையூர் லிங்கநகர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மனமகிழ் மன்றத்தை மூடக்கோரியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில், அப்பகுதி பொதுமக்களும் இணைந்து மனமகிழ் மன்றத்தை மூட கோரி கோஷங்கள் எழுப்பினர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட செந்தில்நாதன் உட்பட 150க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .
Comments are closed.