வினோதினி நினைவு கல்வி அறக்கட்டளை நிறுவனர் எஸ்.கே.டி பாண்டியன் பிறந்தநாள் விழா ! திருச்சியில் கோலாகல கொண்டாட்டம்!
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி இணைச்செயலாளரும், வினோதினி நினைவு கல்வி அறக்கட்டளை நிறுவனத் தலைவருமான எஸ்.கே.டி பாண்டியனுக்கு நேற்று திங்கட்கிழமை 48வது பிறந்தநாள். இதையொட்டி திருச்சி, பழைய பால்பண்ணை மெயின்ரோட்டில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அரங்கத்தில் பிரம்மாண்ட பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன், முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன், தமிழ்நாடு சோழிய வேளாளர்கள் சங்க மாநிலத்தலைவர் டாகடர் வி.ஜெ.செந்தில், ராக்போர்ட் டைம்ஸ் வார இதழின் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர். லெக்ஷ்மி நாராயணன், பாஜக மாவட்டத்தலைவர் ராஜசேகர், தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ், திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் பி.வி.வெங்கட், பொருளாளர் எஸ்.ஆர்.கிஷோர் குமார், திருச்சி ஆவின் சேர்மன் சி.கார்த்திகேயன், டி.ஏ.எஸ்.கலீல், 14 வது வார்டு அதிமுக கவுன்சிலர் சி.அரவிந்தன், திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் & இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் ஜெ.இப்ராம்ஷா, மலைக்கோட்டை ஐயப்பன், கே.பழனிவேல் பிள்ளை, மகாலிங்கம், தங்கம் ரத்னகுமார், திருபில்டர்ஸ் திருநாவுக்கரசு, வரகனேரி பி.ஆர்.ராஜாராமன் உள்ளிட்ட நிர்வாகிகள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகி பி.ராஜாங்கம், பாஜக பிரமுகர் பி.எம்.சுதாகர், பி.ராமச்சந்திரன், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தலைவர் எம்.கே.கமலக்கண்ணன், மூர்த்தி, ஶ்ரீதர், யூ.எஸ்.கருப்பையா, ஏ.எம்.பி முகம்மது அஹமது, உறையூர் முருகானந்தம், எஸ்கே.சங்கர், காங்கிரஸ் கட்சி பிரமுகர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை எஸ்.கே.டி வினோதினி நினைவு கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் சித்ரா, வழக்கறிஞர் சிவா,வினோத் உள்ளிட்ட பலர் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments are closed.