Rock Fort Times
Online News

திருச்சிலிருந்து – மங்களூருக்கு தொடங்கியது விமான சேவை!

திருச்சியிலிருந்து மங்களூருக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தொடங்கியுள்ளது. திருச்சியிலிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகின்றது. இந் நிலையில் திருச்சியில் இருந்து மங்களூருக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா விமான நிறுவனம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. முற்பகல் 11மணிக்கு மங்களூரிலிருந்து புறப்பட்டு பகல்12 மணிக்கு திருச்சியை அடைந்து, பின்னர் திருச்சியிலிருந்து மீண்டும் பகல் 12.50க்கு புறப்பட்டு 1.50க்கு மங்களூரை சென்றடைகிறது. இது தொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமான நிலைய பொது மேலாளர் ஜலால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன மேலாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்