Rock Fort Times
Online News

துறையூர் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் திருட முயன்ற வாலிபர் பொதுமக்களிடம் வசமாக சிக்கினார்…!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாவி. இவரது மனைவி லதா. காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு லதா, வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 2 மணி அளவில் மர்மநபர் ஒருவர் வீடு புகுந்து லதாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது திடுக்கிட்டு எழுந்த லதா, திருடன்…திருடன்… என கூச்சலிட்டார். உடனே, திருடன் காட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டான். இந்த தகவல் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு பரவியதும் திருடனை மடக்கிப் பிடிக்க முயன்றனர். நாலாபுறமும் சென்று தேடியதில் காட்டுக்குள் மறைந்திருந்த திருடன் பொதுமக்கள் கையில் வசமாக சிக்கிக் கொண்டான். பின்னர், அந்த வாலிபரை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த புலிவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்