Rock Fort Times
Online News

பாறைகள் சரிந்து தண்டவாளத்தில் விழுந்ததால் நீலகிரி மலை ரயில் சேவை ரத்து…!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை நீலகிரி மலை ரயில் சேவை தினசரி நடைபெற்று வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், கல்லாறு மற்றும் ஹில் குரோவ் ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதன் காரணமாக மலை ரயில் சேவை இன்று(18-05-2024) ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தண்டவாள சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் மீண்டும் இந்த வழியாக ரயில் சேவை தொடங்கப்படுகிறது. மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்