
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட மாநகர மகளிர் அணி சார்பில் பெண் தலைவர்களின் பயிற்சி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பொற்கொடி மற்றும் மாநகர மகளிர் அணி அமைப்பாளர் சிந்துஜா ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு மகளிர்க்கு ஆலோசனை வழங்கி பேசினர். இதில், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், சபியுல்லா, மாநில நிர்வாகி செந்தில் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லீலாவேலு, மூக்கன், மாநகர துணை செயலாளர் சந்திரமோகன், சரோஜினி, செல்லையா, பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.