Rock Fort Times
Online News

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார், மாணிக்கம் தாகூர்…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகித்த செல்வப் பெருந்தகை மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று(29-06-2026) பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தனது பொறுப்புகளை மாணிக்கம் தாகூரிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்