தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதியின்றி ரீல்ஸ், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது சட்டப்படி குற்றம் என்று சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சமீப நாட்களாக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை ஆய்வு என்ற பெயரில் சிலர் வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்த செயல், நோயாளிகளின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் இருப்பதால் அத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விதிமுறைகளை மீறிச் சிகிச்சைகளை வீடியோ எடுப்போர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. நேற்று விருதுநகரில் தவெக நிர்வாகி போலியோ சொட்டு மருந்து செலுத்தி ஆய்வு செய்வது போன்று வீடியோ வைரலான நிலையில் தமிழக சுகாதாரத்துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.