திருச்சி கல்மந்தை பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் அடுக்குமாடி கட்டுவதற்காக 60 ஆண்டு காலம் 3 தலைமுறையாக குடியிருந்த வீடுகளை காலி செய்து கொடுத்த மக்களுக்கு உடனடியாக வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கல்மந்தை பகுதி மக்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு கல்மந்தை கிளைச் செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு ரங்கராஜன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர். வீடு வழங்காவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.