வடலூா் தருமசாலை பகுதியைச் சோ்ந்தவா் திருமுருகன் (35). நெய்வேலியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் கிஷோா் (15), வடலூா் சந்தைதோப்பு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தான். விளையாட்டு போட்டியில் அதிக ஆர்வம் கொண்ட கிஷோர், மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 24-ம் தேதி மாலை பள்ளி வளாகத்தில் ஈட்டி எறிதல் பயிற்சியின்போது கிஷோர் தலையில் ஈட்டி பாய்ந்ததில் பலத்த காயமடைந்தான். அதனைத்தொடர்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்று(30-07-2024) கிஷோர் உயிரிழந்து
விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு மனமுடைந்த கிஷோரின் தாயார், விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1
of 872
Comments are closed.