திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…!
மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்தது
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் இன்று(30-07-2024) நடந்தது. கூட்டத்தில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் கலந்து கொண்டு பேசினார். இதில், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், மாநில பீடி பிரிவு செயலாளர் சகாபுதீன், அவைத்தலைவர் அய்யப்பன், மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, பொதுக்குழு உறுப்பினர்கள் பாலக்கரை சதர், மல்லிகா, பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ்.பூபதி, வெல்லமண்டி சண்முகம், சுரேஷ்குமார், ரோஜர் , ஏர்போர்ட் விஜி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, புத்தூர் ராஜேந்திரன், கலைவாணன், நாகநாதர் பாண்டி, அணி செயலாளர்கள் இலக்கிய அணி பாலாஜி, கலிலுல் ரகுமான், வெங்கட் பிரபு, ராஜேந்திரன், கருடா நல்லேந்திரன், அப்பாஸ், இலியாஸ், வட்டச் செயலாளர்கள் கயிலை கோபி, வசந்தம் செல்வமணி, ஒத்தக்கடை மகேந்திரன், செல்லப்பா மற்றும் நிர்வாகிகள் வாழைக்காய் மண்டி சுரேஷ், ரவீந்திரன், அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா , உறந்தை மணிமொழியன், இன்ஜினியர் ரமேஷ், சொக்கலிங்கம், கே.கே.நகர் சதீஷ், மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.