காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளூர் அடுத்த கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் 5 வயது மகன் நிர்மல்ராஜ் வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று ஓடி வந்து சிறுவனை கடித்துக் குதறியதில் வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவனது தந்தை, நாயிடம் இருந்து மகனை காப்பாற்ற முயன்ற போது அவரையும் அந்த தெரு நாய் கடித்துவிட்டு ஓடிவிட்டது. பின்னர், சிறுவனுக்கு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சமீப காலமாக இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே போல பலரை கடித்தும் உள்ளன. ஆகவே, இப்பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Comments are closed.