நேஷனல் ஃபியூச்சர் ஸ்டார் அத்லெடிக் கிளப் சார்பாக கோடைகால சிறப்பு முகாம்… திருச்சியில் ஒரு மாதம் நடந்தது…!
நேஷனல் ஃபியூச்சர் ஸ்டார் கிளப் அத்லெடிக் சார்பாக திருச்சி மாவட்ட தடகள சங்கத்துடன் இணைந்து ஆண்டுதோறும் மாணவ- மாணவிகளுக்கு கோடைகால சிறப்பு முகாம் நடத்தி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு கோடைகால சிறப்பு முகாம் திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை நடைபெற்றது. இதில்,70 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உடல் தகுதி மற்றும் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடத்தப்பட்டன.இந்த பயிற்சி முகாமின் நிறைவு விழா இதே மைதானத்தில் நடைபெற்றது. வாக்கர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் தாய்வீடு சிவக்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளர் ராஜு, கிளப்பின் துணைத் தலைவரும், ராக்போர்ட் டைம்ஸ் முதன்மை செய்தி ஆசிரியருமான எஸ்.ஆர்.லெஷ்மி நாராயணன் ஆகியோர் மாணவ – மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினர். மேலும், திருச்சி ஆயுதப்படை கமாண்டன்ட் எம்.ஆனந்தன், ரயில்வே காண்ட்ராக்டர் துளசிதாசன், ரயில்வே மைதான பொறுப்பாளர் தமிழரசன், ஸ்பெக்ட்ரம் ஆர்ட்ஸ் உரிமையாளர் அன்பு மற்றும் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர் . இதற்கான ஏற்பாடுகளை நேஷனல் ஃபியூச்சர் ஸ்டார் அத்லெடிக் கிளப் தலைவரும், எஃப்.எஸ்.எம். ஷாப்பிங் மால் உரிமையாளருமான எஸ்.எம்.எஸ்.முகமது அபுபக்கர் மற்றும் பயிற்சியாளர்கள் ஜீவானந்தம், திருமுருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இந்த கிளப்பில் பயிற்சி பெற்ற மாணவ-மாணவிகள் பலர் மாவட்ட, மாநில அளவிலும், காமன்வெல்த் போன்ற போட்டிகளிலும் பங்கு பெற்று பல்வேறு சாதனைகள் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.