அரியலூர் மாவட்டம் அயன்ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி (வயது 65). விவசாயி .இவர் புற்றுநோய்க்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். மனைவி அவரை கவனித்து வந்தார். இந்நிலையில் மனைவி மருந்து வாங்க சென்றிருந்த நேரத்தில் வீரமணி மருத்துவமனையில் இருந்து ஓடிவிட்டார். அவர் எங்கு சென்றார்?, என்ன ஆனார்? என்று தெரியவில்லை . இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய வீரமணியை தேடி வருகின்றனர்.
Comments are closed.