திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்காக ரயில்வே மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் விளார் ரோடு காயிதே மில்லத் நகர் 2வது தெருவை சேர்ந்த ஹரிதாஸ் வயது (66) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, அவரது குடும்பத்தினர் யாரும் வந்து பார்க்கவில்லை என்றும் இதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று ( 18.12.2023 ) மதியம் திடீரென மருத்துவமனை மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிதாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 || 11-ம் திருநாள் || ஸ்ரீநம்பெருமாள் ஆளும் பல்லக்கு

Now Playing
தைப்பூச விழா தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம்

Now Playing
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள் 10ம் திருநாள் மாலை சப்தாவரணம் திருவீதி சுற்று

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான மேடைப் பேச்சு...

Now Playing
ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025. (9-ம் திருநாள் ) தீர்த்தவாரி..!
1
of 989

Comments are closed, but trackbacks and pingbacks are open.