Rock Fort Times
Online News

2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட மகனுக்கு உதவிட கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு அளித்த தாய்…

திருச்சி மாவட்டம், தொட்டியத்தை அடுத்த அழகரை கிராமத்தை சேர்ந்தவர் வனஜா(36). அந்த பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து தன்து ஒரே மகன் ஹரிஷ் உடன்(14) வாழ்ந்து வருகிறார்.
இவர் இன்று(22-01-2024) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மகனுடன் வந்து மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார். அதில், எனது மகன் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது, 2 சிறுநீரகங்களும் செயலிழந்தது தெரியவந்தது. தினமும் 2 வேளை டயாலிசிஸ் செய்யும் நிலை உள்ளது. குடும்பம் நடத்தவே சிரமப்பட்டு வரும் நிலையில், மகனுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறேன். எனவே, எனது மகனுக்கு மருத்துவ உதவி, பண உதவி வழங்க வேண்டும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்