திருச்சியில் 26ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு- பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி ஆலோசனை…
திருச்சி மாவட்டம் சிறுகனூரில், வருகிற 26ம் தேதி( வெள்ளிக்கிழமை) விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு அதன் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடக்கிறது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதோடு லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், மாநாட்டிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி மண்டல காவல்துறை துணைத் தலைவர் மனோகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். மேலும், முக்கிய விஐபிகள் வரும் வழித்தடத்தையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.