திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்… மாவட்ட செயலாளர் ப.குமார் பங்கேற்பு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் லால்குடி தெற்கு, வடக்கு ஒன்றிய கழகம், லால்குடி நகரம், பூவாளூர் பேரூர் கழகம் சார்பில், மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் திமுக அரசை கண்டித்து தெருமுனை பிரசார கூட்டம் லால்குடி ரவுண்டானா பகுதியில் நடைபெற்றது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ப.குமார் தலைமை தாங்கி பேசினார். தலைமைக் கழக பேச்சாளர் தில்லை செல்வம் சிறப்புரையாற்றினார். மேலும் லால்குடி, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான தெருமுனை பிரசார வாகனத்தை ப.குமார் துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் திருச்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் சுரேஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.பாலன், மாவட்ட இளைஞர்- இளம் பெண்கள் பாசறை செயலாளர் அருண்நேரு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் செல்வ மேரி ஜார்ஜ், சிறுபான்மை நலப் பிரிவு செயலாளர் டோமினிக் அருள்ராஜ், ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன், வழக்கறிஞர் அசோகன், நகர செயலாளர் பொன்னி சேகர் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.