தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு திருநள்ளார் ஆண்டி தெருவை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் கஜேந்திரன் (வயது 42 ).இவர் நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்ல முயன்றார். அப்போது இமிகிரேஷன் அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்டை பரிசோதித்தனர். அதில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக இமிகிரேஷன் அதிகாரி மெய்யப்பன் திருச்சி ஏர்போர்ட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிந்து கஜேந்திரனை கைது செய்தார்
Comments are closed, but trackbacks and pingbacks are open.