பெரம்பலூர் மாவட்டம், குறும்பலூர் சிவன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 50). இவர் திருச்சி தில்லை நகரில் மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல் இரவு மருந்து கடை கணக்குகளை சரிபார்த்துவிட்டு தனது காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்கலூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு திரும்பிய போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல், அந்த காரை வழிமறித்து ஜெயராமனை கத்தி முனையில் மிரட்டி ரூ.5000 ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து சமயபுரம் போலீசில் ஜெயராமன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியைச் சேர்ந்த முகமதுகான் சாகிப் ( 36), சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்த பாலா என்கிற பாலமுருகன்( 32) பாலக்கரை சுப்பையா தெருவை சேர்ந்த சந்தோஷ் (22 )ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Comments are closed.